சாலை மறியலில் ஈடுபடும் முயற்சி அதிகாரிகள் சமரசம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மிளகனூர் கண்மாயில் தண்ணீர் வரத்து இல்லாததால், ஆறு கிராம விவசாயிகள் அன்னியனேந்தல் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். 30 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தடுப்பணையின் ஷட்டர் உயரம் அதிகமாக இருப்பதால் தண்ணீர் கண்மாயில் சேரவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர். தகவல் அறிந்த தாசில்தார், பொறியாளர், டிஎஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, ஷட்டர் பிரச்சனை மார்ச் மாதத்திற்குள் சரி செய்யப்படும் என்றும் கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் என்றும் உறுதியளித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் மறியலை கைவிட்டனர்.

தொடர்புடைய செய்தி