திருப்புவனத்தில் 50 சிசிடிவி கேமராக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளன. மானாமதுரை டிஎஸ்பி பார்த்திபன் கூறுகையில், திருடப்பட்ட பொருட்கள் அல்லது பறிக்கப்பட்ட நகைகளைக் கண்டுபிடிக்க சிசிடிவி காட்சிகள் மிகவும் உதவியாக இருக்கும் என்றும், குற்றவாளிகளைத் துல்லியமாக அடையாளம் காண இது முக்கிய சாட்சியாக அமையும் என்றும் தெரிவித்தார். குற்றச் சம்பவங்களில் சிசிடிவி காட்சிகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.