நாவல் பழம் கிலோ 300க்கு விற்பனை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் இன்று நடைபெற்ற வாரச் சந்தையில் ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட நாவல் பழங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்தன. கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் பழமாக கருதப்படுவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இந்த ஆண்டு விளைச்சல் மற்றும் வரத்து குறைவால் நாவல் பழத்தின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ நாவல் பழம் ரூ. 250 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி