சிவகங்கை அருகே பூவந்தியில் உய்யவந்த அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. கோயில் பொட்டலில் நடந்த இந்தப் போட்டியில் 15 காளைகளும் 135 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். வட்ட வடிவில் அமைக்கப்பட்ட மைதானத்தில், ஒவ்வொரு சுற்றிலும் களமிறங்கும் காளையை அடக்க 25 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு சுற்றிலும் 9 வீரர்கள் களமிறங்கி காளையை அடக்க வேண்டும் என்ற விதிமுறையின்படி போட்டி நடந்தது.