சிவகங்கை மாவட்டம் கொம்புகரனேந்தலைச் சேர்ந்த மீனாட்சிக்கும், அண்டை வீட்டைச் சேர்ந்த சந்திரனுக்கும் இடையே இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் 5க்கும் மேற்பட்டோர் மீனாட்சியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மீனாட்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார்.