இலங்கை தமிழர்களுக்கு புதிய குடியிருப்புகள்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலம் பகுதியில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 52 புதிய குடியிருப்புகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் திறந்து வைத்து பயனாளிகளுக்கு வழங்கினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் சிவகங்கை மாவட்டத்தில் ரூ. 22 கோடி மதிப்பீட்டில் 480 வீடுகள் கட்டி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வாக்கு அரசியலுக்காக திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர், வாக்குரிமை இல்லாத இலங்கைத் தமிழர்களுக்கும் குடியிருப்புகள் வழங்கப்பட்டிருப்பது முதல்வர் மனிதநேயத்துடன் செயல்படுவதற்கான சான்று என்றார். மேலும், மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் 1.31 கோடி பெண்களுக்கு ரூ. 5,000 வழங்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி