மானாமதுரை அருகே பிசர் பட்டிணம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நள்ளிரவில் மர்ம நபர்கள் புகுந்து சாக்குகள் எடை இயந்திரங்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து, பருவகால பட்டியல் எழுத்தர் தேன்மொழி ‘பிளாக் லிஸ்ட்’ செய்யப்பட்டுள்ளதாகவும், மேற்பார்வையாளர் ராமமூர்த்திக்கு ‘ஷோக்கஸ் நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளதாகவும் மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.