ஆந்திராவைப் போன்று தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கடும் ஊனமுற்றோருக்கு ரூ.10,000, சாதாரண ஊனமுற்றோருக்கு ரூ.6,000, படுக்கை நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15,000 என உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.