சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுற்றியுள்ள சிப்காட், சுந்தர் நடப்பு, கீழக்கண்டனி, உருளி உள்ளிட்ட பகுதிகளில் இன்று (ஜூலை 31) மாலை மிதமான மழை பெய்தது. கடந்த இரண்டு நாட்களாக நிலவிய கடும் வெயிலால் அவதிப்பட்ட மக்களுக்கு, இம்மழை சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. வெயிலின் தாக்கம் குறைந்ததுடன், சூழல் குளிர்ச்சியாக மாறியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.