நியாய விலைக் கடையை திறந்து வைத்த எம்எல்ஏ

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நவதாவு கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரூ9.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக் கடையை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் திறந்து வைத்தார். பொதுமக்களின் நலன் கருதி தமிழக முதல்வர் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், கல்வி மற்றும் மருத்துவத் துறைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் திட்டங்கள் முடங்கிக் கிடந்த நிலையை மாற்றி, தற்போது வளர்ச்சித் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்த நியாய விலைக் கடையை கிராம மக்கள் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ராஜாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சகாயம், ஒன்றிய கவுன்சிலர் முனுசாமி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி