சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமம் அருகே அய்யம்பட்டி கிராமத்தில் அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் 700-க்கும் மேற்பட்ட காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியின் போது காளைகள் முட்டியதில் 20 பேர் காயமடைந்தனர்.