அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு பால்வினை நோய் இருப்பதாகவும் அந்த சிறுமி இரண்டு மாதங்களுக்கு முன்பு பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தவே மருத்துவர்கள் குழந்தைகள் நலக்குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் பழையனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து அது குறித்து சிறுமியிடம் விசாரனை மேற்கொண்ட காவல்துறையினர் அவரது தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த வழக்கானது சிவகங்கை ஒருங்கினைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இதில் தீர்ப்பளித்த நீதிபதி கோகுல் முருகன் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் வாழ்நாள் சிறைத்தண்டனை என நான்கு வாழ்நாள் சிறைத்தண்டனையும் 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்ததுடன் மேலும் சிறுமியை மிரட்டிய குற்றத்திற்காக 2 ஆண்டு சிறைத்தண்டனையும் 100 ரூபாய் அபராதமும் வழங்கி தீர்ப்பளித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையும் தர உத்தரவிட்டுள்ளார்.