சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பழையனூர் காவல் நிலைய ஆய்வாளர் மயில், குருந்தங்குளம் சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் வாளுடன் சுற்றித்திரிந்த செந்தாமரை என்ற தாமரைப்பாண்டியை கைது செய்தார். அவரிடமிருந்து 77 சென்டிமீட்டர் நீளமுள்ள வாள் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.