சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அக்ரஹாரம் தெருவில் உள்ள அருள்மிகு சுந்தர விநாயகர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் புனித கலச நீரை கோபுர கலசங்களிலும், மூலவர் அருள்மிகு சுந்தர விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர். அப்போது பக்தர்கள் “ஓம் விநாயகா போற்றி” என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.