சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே தூதை கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மலைச்சாமி, இன்று மாலை பணி முடிந்து வீடு திரும்பும்போது, மானாமதுரை செல்லும் அரசு டவுன் பஸ் லாடனேந்தல் அருகே சென்றபோது பின்பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் பின்பகுதி சீட்டில் அமர்ந்திருந்த மலைச்சாமி தூக்கி வீசப்பட்டு, உடைந்து மரப்பலகையில் சிக்கி இரண்டு கால்களிலும் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.