சோழீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில், இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கடந்த 31ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. புனித நீர் அடங்கிய கலசங்கள் காலை 9.00 மணிக்கு யாகசாலையிலிருந்து புறப்பட்டு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்த விழாவில் இளையான்குடி பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் சமூகத்தினர் குளிர்பானங்கள் வழங்கி, நன்கொடைகளையும் அளித்தனர். சிவகங்கை ராணி மதுராந்தகி நாச்சியார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி