சிவகங்கை: கிடா முட்டுச் சண்டை – 100க்கும் மேற்பட்ட கிடாக்கள் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகேயுள்ள துவரங்குளத்தில் இரண்டாம் ஆண்டு கிடா முட்டுச் சண்டை போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிடாக்கள் பங்கேற்றன. கிடா வளர்ப்போர் உரிமையாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில், 'ஜாக்கி' திரைப்பட நடிகர்கள் யுவான் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ் மற்றும் இயக்குநர் டாக்டர் பிரகபல் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கிடாக்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி