மானாமதுரை அருகே ராஜகம்பீரம் பகுதியில் வைகை ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மானாமதுரை எஸ்ஐ பூபதிராஜ் தலைமையிலான போலீசார் சென்றனர்.
போலீசாரை பார்த்ததும் மணல் கொள்ளையர்கள் தப்பித்து சென்றனர். மேலும் மணல் திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட ஜேசிபி, டிப்பர் லாரியை பறிமுதல் செய்து மானாமதுரை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று வழக்கு பதிவு செய்து மணல் திருட்டில் ஈடுபட்ட மணல் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.