மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக இருந்த அஜித்குமார், காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அதிகாலையில் அஜித்குமார் வீட்டிற்கு வந்த மூவர், தங்களை காவல்துறையினர் என அறிமுகப்படுத்தி, கதவைத் தட்டி பெண் மாயமானதாக விசாரணை நடத்தியுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.