மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், காவலர்களால் விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற வழக்கில், அஜித்குமாரின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிபதி ஸ்ரீமதி, அஜித்குமார் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அவரது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், பொய் புகார் அளித்த நிக்கிதாவை கைது செய்ய வேண்டும் என்றும், இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்றும் கேள்வி எழுப்பினர்.