சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில், போலி நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட காரில் ஐந்து ஆட்டுக்குட்டிகளைத் திருடி வந்த கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர். ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமாக நின்ற காரை விசாரித்தபோது, தம்பதி தப்ப முயன்றனர். துரத்திச் சென்ற காவல்துறையினர் காரை மடக்கி சோதனையிட்டதில், ஐந்து ஆட்டுக்குட்டிகள் இருப்பது தெரியவந்தது. காரில் போலி நம்பர் பிளேட் பொருத்தப்பட்டிருந்ததும் உறுதி செய்யப்பட்டது.