சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே குமார குறிச்சி வடக்கு குடியிருப்பில் நேற்று மின்கம்பியில் உயர் மின் அழுத்தம் ஏற்பட்டு மீட்டர் பெட்டிகள் வெடித்தன. இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த வாஷிங் மெஷின், குளிர்சாதன பெட்டி போன்ற முக்கிய மின்சாதனங்கள் பழுதானது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படாத நிலையில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமான நிலையில் மீண்டும் மின் இணைப்பு தருவதற்கு மின்வாரியத்துறை அதிகாரிகள் நான்காயிரம் முதல் 5000 வரை பணம் கேட்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து இளையான்குடி மின்வாரிய அலுவலகத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்த கிராம மக்களின் புகார் குறித்து அப்பகுதி மின்வாரிய உதவி இயக்குனரிடம் கேட்டபோது, உயர் மின் அழுத்தத்தை சரிசெய்ய மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.