சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே கொந்தகை கிராமத்தைச் சேர்ந்த தமிழ் இனியன் என்ற மாணவர், ஹரியானாவில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் 11 வயது பிரிவில் 600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பியுள்ளார். அவருக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறுவனின் தாயார் நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.