பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இரண்டு கோடிக்கு ஆடுகள் விற்பனை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கால்நடை சந்தையில் பக்ரீத் பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு கால்நடைகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 10 கிலோ எடையுள்ள ஆடுகள் ரூ. 7 ஆயிரம் முதல் ரூ. 12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. ஒன்றரை கிலோ எடையுள்ள கோழி ரூ. 600க்கும், சேவல் ரூ. 700க்கும், வான்கோழி ரூ. 400க்கும் விற்பனையாகின. வியாபாரிகள் தரப்பில் சுமார் 2 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி