வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், கருணாகரன் என்ற இளைஞரிடம் இருந்து 2 கிராம் தங்க மோதிரம், அலைபேசி மற்றும் ரூ.4000 பணத்தை பறித்துச் சென்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். தல்லாகுளம் முனீஸ்வரர் கோயில் அருகே டூவீலரில் வந்த கருணாகரனை வழிமறித்து தாக்கி, கூகுள் பே நம்பரை கேட்டு பணத்தை மாற்றிய குற்றச்சாட்டில் உருளி முத்து ராஜா, வெங்கடேஷ், ஆதி கேசவன், முத்துச்செல்வம் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து தங்க மோதிரம் மற்றும் அலைபேசி மீட்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி