பின்னர், காவல் உதவி ஆய்வாளர் குகன் முன்னிலையில் இரு குடும்பத்தினரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், பள்ளியில் இருந்து வீடு திரும்பிய 12 வயது சிறுமி மீது முருகேஸ்வரி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. சிறுமி ஆட்டோவில் மானாமதுரை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். முருகேஸ்வரி, தங்கப்பாண்டி, தமிழரசி, முத்துப்பாண்டி, ஆர்த்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென முத்துக்குமாரின் குடும்பத்தினர் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். முருகேஸ்வரி தற்போது சென்னையில் காவலராக பணியாற்றி வருகிறார்.
நெல்லையப்பர் கோயில் தேர் ஓடும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு