கல்வித்துறை ஊழியர் உடல் உறுப்புகள் தானம் வழங்க சம்மதம்

சிவகங்கை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரியும் மதுரையைச் சேர்ந்த இளஞ்செழியன் (46), தனது சிறுநீரகம், கல்லீரல், இருதயம், நுரையீரல், குடல், கணையம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானம் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்கான சம்மதக் கடிதத்தை மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனிடம் அவர் வழங்கியுள்ளார். கடந்த ஆண்டு சிறந்த பணியாளராக மாவட்ட ஆட்சியரால் பாராட்டு பெற்றவர் இவர்.

தொடர்புடைய செய்தி