சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், பேரூராட்சித் தலைவர் சேங்கை மாறன் தலைமையில் முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், மேற்கு ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கைமாறன் முன்னிலையில், இனிப்புகள் மற்றும் போர்வை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. "தமிழக முதல்வர் வாழ்க" என கோஷங்கள் எழுப்பியும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் திருப்புவனம் நகரச் செயலாளர் நாகூர் கனி மற்றும் ஏராளமான பொதுமக்கள், திமுகவினர் கலந்துகொண்டனர்.