கீழடியில் செங்கல் சுவர்கள்கண்டுபிடிப்பு

கீழடியில் 11-வது கட்ட அகழாய்வு கடந்த மார்ச் 18-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 7 குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், அவற்றில் ஓடுகள், பானைகள், தொட்டி, வடிகால் குழாய்கள் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஏற்கெனவே சிறிய அளவிலான செங்கல் சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது 4 மீட்டர் நீளமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட செங்கல் சுவர் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் சுவர் அருகிலுள்ள மற்றொரு குழிவரை நீண்டு செல்கிறது என்பது ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி