சிவகங்கை மாவட்டத்தில் கீழடி, கொந்தகை, மணல்மேடு, பெத்தானேந்தல், அல்லிநகரம் பகுதிகளில் மாடு வளர்ப்பு முக்கியத் தொழிலாக உள்ளது. திருப்புவனம் தாலுக்காவில் வாரந்தோறும் புதன்கிழமை காலை மாட்டுச் சந்தை நடைபெறுகிறது. இன்றைய சந்தையில் சுமார் 100 மாடுகள் மற்றும் 250 கன்று குட்டிகள் விற்பனைக்கு வந்தன. சுமார் ₹50 லட்சம் மதிப்பில் வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.