இந்நிலையில் மானாமதுரையில் நகராட்சிக் கூட்டம் தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் ஆணையர் ஆறுமுகம் முன்னிலையில் வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்க கூட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. அப்போது மானாமதுரை பத்தாவது வார்டு பாரதிய ஜனதா கட்சியின் கவுன்சிலர் நம்கோடி என்பவர் மயானத்தின் அருகே குப்பைக்கிடங்கில் கட்டப்பட்டுள்ள நீர்தேக்கத் தொட்டிக்குள் கழிவுநீர் கசிந்து வருவதாகவும் அங்கு இருந்து கழிவுநீரை குடத்தில் பிடித்துக்கொண்டு நகராட்சிக் கூட்டத்துக்குள் இந்தத் திட்டத்தை கைவிட கோரி கையில் பதாகை உள்ளபடி அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால் நகராட்சித் தலைவர் மாரியப்பன் கென்னடிக்கும் பாஜக கவுன்சிலருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நிலவியது. தொடர்ந்து பாஜக கவுன்சிலர் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். அவரை கண்டுகொள்ளாமல் நகராட்சிக் கூட்டமும் நடத்தப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.