சிவகங்கை: குழந்தைகளுக்கு இணையவழி திறன் பயிற்சி

கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 40 பயிற்சி பிரிவுகளில் 10 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு இப்பயிற்சி வழங்கப்படும். உயர்கல்வி முதலாமாண்டு முதல் இறுதியாண்டு வரை பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை http: //application. tnbocw. com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்தோ அல்லது தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரிலோ சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி