சிவகங்கை: சூரிய உலர்த்திக் கூடத்தினை தொடங்கி வைத்த ஆட்சியர்

சிவகங்கை மாவட்டம், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் சார்பில், இளையான்குடி வட்டார பகுதியில் இயங்கி வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மேம்பாட்டு வசதிக்கென, தனியார் நிறுவனங்களின் (Syngenta) பெருநிறுவன சமூகப்பொறுப்பு நிதியின் Corporate Social Responsibility Fund (CSR Fund) கீழ் அமைக்கப்பட்டுள்ள வேளாண் விளை பொருட்களுக்கான சூரிய உலர்த்திக் கூடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், விவசாய பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். 

இதில் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) தமிழ்ச்செல்வி, Syngenta நிறுவன இயக்குநர் (புதுதில்லி) திரு. வைத்தியநாதன், துணை தலைவர் (Hand In Hand India) கண்ணன், இளையான்குடி உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர் சுந்தர், வேளாண்மை அலுவலர்கள் கனிமொழி, புவனேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி