சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இளமனூரில் சமூக அடையாள பலகை தொடர்பாக இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரண்டு காவலர்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்த எஸ்.பி. சிவப்பிரசாத் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை கைது செய்யக் கோரி 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.