சிலம்பம் சுற்றிய சிறுவர்கள் – வட்டத்தை சுற்றிய பெற்றோர்கள்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள செயிண்ட் ஜோசப் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 34வது ஆண்டு விளையாட்டு விழா தாளாளர் கிறிஸ்டிராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் மழலை மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், சிலம்பம், யோகா, சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெற்றோருக்கான அதிர்ஷ்ட வட்டம், தொப்பி பறிக்கும் போட்டிகளும் நடந்தன. சிறப்பு விருந்தினராக எஸ். ஐ. கமலா நேரு பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளி முதல்வர் ஜீவிதா, ஆசிரியர்கள், மாணவர்கள் விழாவை ஏற்பாடு செய்தனர்.

தொடர்புடைய செய்தி