சிவகங்கை: தூங்கிக் கொண்டிருந்தவரை கடித்த வெறிநாய்.. சிசிடிவி காட்சி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெறிநாய்கள் பொதுமக்களைத் துரத்தி கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள மைக்கேல் பெட்ரோல் பங்கில் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவர் வெறிநாய் கடித்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது போன்ற சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி