சிவகங்கை: பொதுமக்களை அச்சுறுத்தியவர்கள் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள இடைக்காட்டூர் பகுதியில், இளைஞர்கள் சிலர் பொதுமக்களை கத்தியைக் காட்டி மிரட்டுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல்துறையினர் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ராஜகம்பீரம் பகுதியைச் சேர்ந்த ராஜா வயது 19 அதே பகுதியைச் சேர்ந்த இருள் முருகன் வயது 19, சசிகுமார் வயது 20, திருப்புவனம் பிச்சைப்பிள்ளையேந்தல் பகுதியைச் சேர்ந்த அஜீத் (20), ராஜகம்பீரம் பகுதியைச் சேர்ந்த ஆண்டி வயது இருபது ஆகிய ஐந்து இளைஞர்கள் மீது மானாமதுரை காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் ராஜதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி