சிவகங்கை: பஜார் பகுதியில் லாட்டரி விற்பனை செய்தவர் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பஜார் பகுதியில் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக இளையான்குடி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அவர்கள் மேற்கொண்ட சோதனையில் காதர் பிச்சை தெருவைச் சேர்ந்த சாதிக் அலி (54) என்பவர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், 4 ரூபாய் மதிப்புள்ள 520 லாட்டரி டோக்கன்களை பறிமுதல் செய்தனர். மேலும், சாதிக் அலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி