சிவகங்கை மாவட்டம் கீழடியில் 11ம் கட்ட அகழாய்வில் சிறிய வடிவிலான வட்டப்பானை, சேதமடைந்த சாயகிண்ணங்கள், கருப்பு நிற பானை, இருவண்ண வாய் அகன்ற சுடுமண் பாத்திரம் கண்டறியப்பட்டுள்ளது. தோண்டப்பட்ட ஏழு குழிகளிலும் செங்கல் கட்டுமானங்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம், சிந்து சமவெளி நாகரீகத்திற்கு இணையான கட்டடங்கள் கீழடியில் பயன்பாட்டில் இருந்ததாக தெரியவந்துள்ளது.