அண்ணா சாலை அருகே மண் பானைகள் உடைப்பு.. மானாமதுரையில் பரபரப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வெப்பத்தைக் கருத்தில் கொண்டு, மானாமதுரை முழுவதும் அனைத்து கட்சியினரும் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கும் நோக்கில் தண்ணீர் பந்தல்கள் அமைத்து வருகின்றனர். முக்கிய வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த பந்தல்களில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் தண்ணீர் குடித்து பயனடைந்து வருகின்றனர். 

இந்நிலையில், மானாமதுரை அண்ணா சாலை அருகே இரண்டு வாரங்களுக்கு முன் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) கட்சி சார்பாக அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில், தினமும் இரண்டு மண்பானைகளில் தண்ணீர் வைக்கப்பட்டு வந்தது. ஆனால், இன்று த.வெ.க நிர்வாகிகள் வழக்கம்போல் தண்ணீர் வைக்க வந்த போது, இரு மண்பானைகளும் உடைக்கப்பட்டு சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக த.வெ.க நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி