கீழக்கொம்புக்காரனேந்தலில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று (மே 28) ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். அப்போது கோவில் வளாகத்தில் இருந்த மலைத்தேனீக்கள் திடீரென கூட்டமாகப் பறந்து வந்து பக்தர்களைத் தாக்கின. இந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.