தண்ணீர் குழாய்க்கு பள்ளம் தோண்டியவர்கள் மீது தாக்குதல்

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே திருமாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த ராமர், தனது உணவகத்திற்கு தண்ணீர் இணைப்பு எடுக்க பள்ளம் தோண்டியபோது, பஞ்சாயத்து தண்ணீர் விநியோக பணியில் உள்ள முத்துச்செல்வம் என்பவர் வாக்குவாதம் செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராமர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ராமர் அளித்த புகாரின் பேரில் பூவந்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி