சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகா கோச்சடை பகுதியில் இன்று மாலை வெயிலும் சாரல் மழையும் ஒருசேர நிலவியபோது, வானில் அழகிய இரட்டை வானவில் தோன்றியது. இந்த அரிய காட்சியைக் கண்ட அப்பகுதி மக்கள் வியப்படைந்தனர். பலர் தங்கள் செல்போன்களில் இதைப் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மழைக்குப் பின் தோன்றிய இந்த இரட்டை வானவில் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்ததுடன், சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.