சிவகங்கை முத்துச்சாமி நகரைச் சேர்ந்த விக்னேஷ்(28) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவி அனுசுயா தாய் வீட்டில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. விக்னேஷின் மரணம் சந்தேகத்திற்கிடமானது எனக்கூறி, அவரது மனைவி மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சிவகங்கை–மானாமதுரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. சிவகங்கை நகர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.