தமிழகத்தின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் சிவகங்கை மாவட்டத்தில் மேற்கொண்டு வரும் நிலையில், சிவகங்கைக்கு நேற்று முன்தினம் வந்த எடப்பாடி பழனிசாமி கூட்டத்திற்கு வருகை தந்தவர்களுக்கு தலா ரூபாய் 200 வழங்கப்பட்டு ஆட்களை அழைத்து வந்துள்ளனர். குறிப்பாக பெண்களுக்கு ஒரே மாதிரியான சேலை, தலா ரூபாய் 200, ஒரு பாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த கூட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண்மணி பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.