சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இறகு சேரி, நடராஜபுரம் கிராமங்களில் சுமார் 400க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்ல முறையான பாதை இல்லாததால், மழைக்காலங்களில் கண்மாயில் முழங்கால் அளவு நீரில் நனைந்தபடி உடல்களை கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வட்டார வளர்ச்சி அலுவலர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.