சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மாத்தூர் பகுதியில் சாக்கோட்டை சார்புஆய்வாளர் முத்து தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் அனுமதியின்றி சட்ட விரோதமாக டிராக்டர் மூலம் மண் அள்ளி கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டு இரு டிராக்டர்களை பறிமுதல் செய்து மித்ராவயல் பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டி(29) பிரம்புவயல் பகுதியைச் சேர்ந்த ராஜூ(44) ஆகிய இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.