தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை (ஏப்ரல் 10) காரைக்குடி தேவர் சிலை அருகே பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இதையொட்டி, அப்பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த தேர்தல் அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். மேலும், இளைஞர்கள் டிரான்ஸ்பார்மர் மற்றும் மரங்களில் ஏறுவதை தடுக்க, மரங்களை சுற்றி தகரங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.