மாபெரும் மஞ்சுவிரட்டு போட்டி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் இருமதி ஸ்ரீ பாலாருடைய அய்யனார், ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் மாசி மகா சிவராத்திரி திருநாளை முன்னிட்டு இன்று மாபெரும் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். சீறி வந்த காளைகளை எதிர்த்து மாடுபிடி வீரர்கள் விளையாடினர். வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். முன்னதாக கட்டுமாடுகள் அவிழ்த்து விடப்பட்டது.

தொடர்புடைய செய்தி