தேவகோட்டை ரஸ்தா காதி நகரில் ஓய்வு பெற்ற ஆசிரியை மரிய கலைச்செல்வி வீட்டில் தனியாக இருந்தபோது, முகமூடி அணிந்த இருவர் திடீரென நுழைந்துள்ளனர். கூச்சலிட்ட அவரை வாய், கால்களை கட்டி, கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி செயின், தோடு, வளையல் மற்றும் பீரோவில் இருந்த சுமார் 30 பவுன் தங்க நகைகள், ரூ. 10,000 ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். சோமநாதபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.